Reg. No. 58/2023 founder@adhyamtrust.com Mon - Sat: 10:00 am - 06:00 pm
Free Eye Treatment Camp 2025 @ Srivilliputtur
It was Conducted on 29-06-2025 by Adhyam Charitable trust and Aravind Eye Hospital.
In our Eye Treatment Camp, Charitable Trust Administrators and general Public was participated and Received Better Treatment in Thiyagaraja Primary School at Srivilliputtur.
இலவச கண் சிகிச்சை முகாம்
29.6.2025 ஞாயிறு அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா தொடக்க பள்ளியில் வைத்து பொது மக்கள் அனைவருக்கும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் முகாமில் கிருஷ்ணன் கோவில் ஏரியாவை சேர்ந்த அருள் லேப் உரிமையாளர் திரு. திருப்பதி அவர்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் ரத்த டெஸ்ட் இலவசமாக பார்க்கபட்டது. மேலும் முகாமில் கலந்து சிகிச்சை பெற்றோரில் 29 நபர்கள் இலவசமாக கண் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நமது ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகம் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து தரப்பட்டது. நமது டிரஸ்ட்டின் நிர்வாகிகள் சிறப்பாக சேவையாற்றினர். மேலும் நமது டிரஸ்ட் சார்பாக முகாம்க்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் அந்த ஏரியா மக்கள் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கபட்டது.


















