Adhyam Trust

Adhyam Trust

“இலவச கண் சிகிச்சை முகாம்”

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா நடுநிலைப்பள்ளியில் வைத்து 22-02-2026 அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 190க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 41 நபர்கள் இலவச கண்…

உழவாரப்பணி குழு- அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஆலயம், உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

18/01/2026 அன்று திருநெல்வேலி மாவட்டம் உவரி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி ஆலயத்தில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது.இந்த ஆன்மீக பணியில் நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருவருளை பெற்றனர்.🙏🏻🙏🏻🙏🏻

👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா முறம்பு பகுதியில் உள்ள அன்னை திருமண மஹாலில் வைத்து 04-01-2026 அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 170க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 17 நபர்கள் இலவச கண்…

உழவாரப்பணி குழு- அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோவில், கும்பகோணம்.

21/12/2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது.இந்த ஆன்மீக பணியில் நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருவருளைப் பெற்றனர்.🙏🏻🙏🏻🙏🏻

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் புரட்டாசி விசேஷ நாளான சனிக்கிழமை தோறும் நமது டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற அன்னதானத்தில் …. முதல் சனிக்கிழமை 6000 பக்தர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை 9000 பக்தர்களுக்கும், மூன்றாம் சனிக்கிழமை 15000 பக்தர்களுக்கும் கடைசிவார 4 ஆம் சனிக்கிழமை 7000 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றி…

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

04-10-2025 சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு 15000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நமது ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தங்கள் கரங்களால் அன்னம் வழங்கி பெருமானின் ஆசி பெற்றார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 27-09-2025 அன்று புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது. 9000 பக்தர்கள் வரை வருகை தந்து அன்னம் பெற்று சிறப்பித்தார்கள்.

👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ரெங்கநாதபுரம், திருமலாபுரம் சந்தனமாரியம்மன் கோவில் யாதவ சமுதாய கூடத்தில் வைத்து 27-09_2025 சனிக்கிழமை அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 15 நபர்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் வைத்து புரட்டாசி முதல் சனிக்கிழமை (20-09-2025) சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கபட்டது. நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சேவையாற்றினார்கள். நிர்வாகத்தின் சார்பாக அன்னதானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டது.